Monday, March 7, 2011

பெண்கள்

அழகான பெண்கள் ஆபரணம் என்றால் ,
குணமான பெண் பொக்கிஷம் ,
ஒரு இல்லத்தை இல்லறமாக்க,
ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.
***பெண்கள் தின வாழ்த்துகள்

Sunday, March 6, 2011

உன் நினைவுகள் ...

புற்று நோய் போல் உள்ளிருந்து மெல்ல மெல்ல கொல்லுது உன் நினைவுகள் ...
அன்பே......தனி தனி வழியில் நீயும் நானும் சென்றாலும் ...... எம்மை ஒரே
வழியில் இணைத்து செல்கின்றது என் உன் நினைவு.....

ஏமாற்றம்

நீ என்னிடம் கேட்டாய் என்னை ஏமாத்தி விடுவாய? என்று
நீ ஏமாறுவாய் நான் இந்த உலகை விட்டு பிரிந்து போகும் போது!

உறக்கச் சொல்வதெல்லாம் உண்மை அல்ல

உறவுகளை மறந்தேன் நீ உரக்கச் சொன்ன காதலை நம்பி..

இன்று நீ வேரொரு உறவை தேடியபின்பே நான் உணர்தேன்

உறக்கச் சொல்வதெல்லாம் உண்மை அல்ல என்று..

Friday, March 20, 2009

என்ன பெத்தவ..

என்ன பெத்தவள
தெய்வம்ன்னு சொல்லமாட்டேன்..
அதுக்கும் ஒரு படி மேல அவ!...

சின்ன வயசுல குலதெய்வம்
கோயிலுக்கு கூட்டிப்போவா..
விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறம்தான்.
எனக்கு தெரியும்,
என் குலம் காக்க வந்த தெய்வமே அவதான்னு!

யாராவது திண்பண்டம் சாப்பிட,
அவளுக்கு கொடுத்தா..
கைக்குள்ள வச்சிருந்து.. கவனமா எடுத்து வந்து
என்ன சாப்பிட வச்சு அழகுபாப்பா..

எந்த பேண்ட், சட்டை போட்டு வந்து
அவ முன்னாடி நின்னாலும்
பார்க்காமலேயே, அவகிட்டருந்து
வர வார்த்தை..
'மகராசன் மாதிரி இருக்கியா நீன்னு'

எனக்காகவே வாழறாளே அவளுக்கு
என்ன செஞ்சா தகும்.
அவள கண்ணுக்குள்ள வச்சுபார்த்தா
அது ஒன்னும் பெருமைஇல்ல..

அவள பார்க்காம போனா நான் மனுசனே இல்ல...

என் அம்மா..

காய்ச்சல் வந்ததோ எனக்கு..
ஆனால் சுடுவதோ உன்
மனதிற்க்கு..
* நான் பள்ளி செல்லும்
போதெல்லாம்...
ஏன் மா அழுகிறாய் என்பாய்.
உன்னை யாரேனும் திருடி விட்டால் என்ற பயத்தில்..தான் அழுவேன்..
பள்ளி சென்று திரும்பும்
போதெல்லாம்...
உன்னை பார்த்து விட்ட சந்தோஷத்தில்... உன்னை கட்டிக் கொண்டு முத்தமிடுவேன்..
*இன்றும் அலுவலகம்
முடிந்து திரும்பும்
போதெல்லாம்...
ஓடி வந்து உனை கட்டிக் கொள்ள ஆசை தான் அம்மா..
*நீ என்னை கவனித்து கொண்டு என்னுடனே இருக்கும்
நிமிடங்களுக்காக..
அடிக்கடி காய்ச்சல் எனக்கு
வரக்கூடாதா என்று ஆசை பட தோன்றுகிறது...அம்மா...

யார்.நீ...?



ஐந்திரு திங்கள் கருவறை வாசம்
அக்கோவிலின் உள்ளே வாழ்கின்ற போது
நல்லவனா...நீ...?
நல்லவன் என்றால் பிறக்கின்ற சமயம்
உன் தாய் ஏன் கதறுகிறாள்...?

கெட்டவனாய் இருப்பாயோ..!
இல்லை...இல்லை...
மணமான மங்கையின்
மலடி எனும் பட்டத்தை
அருத்தெறிந்த அண்ணல் நீயல்லவா...!

புத்தனாய் இருப்பாயோ...?
பாக்கியம் இல்லையே..
ஆசை எனும் வார்த்தைக்கே
ஆசை படும் ஜென்மம் அல்லவா...!

காந்தியாய் இருப்பாயோ..?
சாத்தியம் இல்லையே
ஆயுதம் இருக்கும் வரை..!

ஏசுவின் பிறவியோ...?
காட்டி கொடுக்க
இன்னொருவன் எதற்கு...
அதற்கும் வாய்ப்பில்லை...!

யார் நீ...?
சொல் என் மானிடனே...
யார் நீ...?

பத்து திங்கள் பாதுகாத்து
உயிர் கொடுத்தாலே ஒரு தெய்வம்.
அவள் சிந்தும் கண்ணீருடன் கேள்
யார்...நீ...? என்று

பாவி உயிர் போகுமுன்னே
பதில் சொல்லிவிடு
மானிடா...?
யார் நீ...? என்று