ஐந்திரு திங்கள் கருவறை வாசம் அக்கோவிலின் உள்ளே வாழ்கின்ற போது நல்லவனா...நீ...? நல்லவன் என்றால் பிறக்கின்ற சமயம் உன் தாய் ஏன் கதறுகிறாள்...?
கெட்டவனாய் இருப்பாயோ..! இல்லை...இல்லை... மணமான மங்கையின் மலடி எனும் பட்டத்தை அருத்தெறிந்த அண்ணல் நீயல்லவா...!
புத்தனாய் இருப்பாயோ...? பாக்கியம் இல்லையே.. ஆசை எனும் வார்த்தைக்கே ஆசை படும் ஜென்மம் அல்லவா...!
காந்தியாய் இருப்பாயோ..? சாத்தியம் இல்லையே ஆயுதம் இருக்கும் வரை..!
ஏசுவின் பிறவியோ...? காட்டி கொடுக்க இன்னொருவன் எதற்கு... அதற்கும் வாய்ப்பில்லை...!
யார் நீ...? சொல் என் மானிடனே... யார் நீ...?
பத்து திங்கள் பாதுகாத்து உயிர் கொடுத்தாலே ஒரு தெய்வம். அவள் சிந்தும் கண்ணீருடன் கேள் யார்...நீ...? என்று
பாவி உயிர் போகுமுன்னே பதில் சொல்லிவிடு மானிடா...? யார் நீ...? என்று | | | | |
No comments:
Post a Comment