Saturday, December 6, 2008

பாரம்!

கடவுள்மீது 'பாரத்தை'ப் போடும்
பக்தர்கள் தோள்களில்
கடவுளே பாரமாய்...
திருவீதி உலா!


முகவரி!

தெருவிளக்கிற்குத் தெரியாது
மேதைகளின் முகவரி
தான் என்று!


ஏக்கம்

எப்போது கிழியும் அக்காவின் சேலை
ஏக்கத்தில் தங்கை
தாவணி ஆசை.


சாயம்

அப்பிக்கொண்டது
மதச் சாயம்,
மறந்து போனது
மனித முகம்


Tuesday, December 2, 2008

சிதைக்க விரும்பாத கவிதை

உனக்குப்
பிடித்த விஷயங்கள்
ஐந்து சொல்லு என்றாள்.

இரண்டாவது நட்பு

மூன்றாவது தனிமை

நான்காவது பேனா

ஐந்தாவது காகிதம்
என்றேன்.

முதலாவது?

அது
ஒரே எழுத்துள்ள சொல்
என்றேன்


Monday, December 1, 2008

சுமை!

மூட்டை சுமந்து
கஷ்டப்படக்கூடாதென்று
பள்ளிக்கு அனுப்பினார்
தந்தை...
பாவம் குழந்தை
பள்ளிக்கும் (புத்தக)
மூட்டையுடன் தான்
செல்கிறது..!

மறைந்த மர்மம்

கன்னத்தில் தழும்பு
காணாமல் போனது
ஆறு சவரன் கூடுதலால்

சிரிப்பூ

அலுவலகத்திலிருந்து திரும்பிய புயல்
அமைதியாய் கரை கடந்தது
குழந்தையின் சிரிப்பில்

பிள்ளைக்காக

பிள்ளைப் பேறுக்காக
மருந்துகளும், மந்திரங்களும்.
நிரம்பி வழிகின்றன,
அனாதை இல்லங்கள்.

முயற்சி!!!

முயன்றால் முடியாதது என்று
எதுவும் இல்லை இவ்வுலகில்....

நானும் முயன்றேன்
உன்னை மறக்க....
ஒவ்வொரு முயற்சியும்
நினைவூட்டியது
நீ என்பது நான் என்று!!!!!!!!

அதிசயம்

வீசும் காற்றில்
விலகியது கூந்தல்...
அடடா என்ன அதிசயம்!
முழு நிலவின் இரு பக்கங்கத்திலும்
மூன்றாம் பிறை- உன் செவ்விதழ் செவிகள்.

Monday, November 24, 2008

இலவசம்

இலவசத்தின் விலை தன்மாணம்
**************************
சோறு இல்லாத வீடுகளுக்கு
சேனல் நூறு கொண்ட தொலைக்காட்சி
சோர்வு தெரியாமல் இருக்க
சோம்பேறிகளை உக்குவிக்க்

உடல் நோக வயிறு காய
உழைப்பவர்களிடம் கட்டாய வரி வசூல்
தமிழில் பெயர் வைத்தாலே ஆபாச
திரைப்படத்துக்கும் வரிவிலக்கு

படித்த வேலை இல்லாத
பட்டதாரிகளுக்கு வீட்டில் அமர
படம் பார்க்க, பட்டம் விட
பிச்சையாய் பணம்

தமிழனுக்கு தன்மானம் உயிரின் மேல்
தலை நிமிர்த்தி நின்றேன்
பதவி, அதிகாரம் பெற
பிச்சைக்காரர்களாய் மதிப்பதென்னெவோ?