| கடவுள்மீது 'பாரத்தை'ப் போடும் பக்தர்கள் தோள்களில் கடவுளே பாரமாய்... திருவீதி உலா! | ||
|
நான் படித்து ரசித்த கவிதைகளை இங்கு சுட்டு [ திருடி ] பதிவு செய்து உள்ளேன் , படைத்தவர்கள் மன்னிக்க வேண்டும்
Saturday, December 6, 2008
Tuesday, December 2, 2008
சிதைக்க விரும்பாத கவிதை
| உனக்குப் பிடித்த விஷயங்கள் ஐந்து சொல்லு என்றாள். இரண்டாவது நட்பு மூன்றாவது தனிமை நான்காவது பேனா ஐந்தாவது காகிதம் என்றேன். முதலாவது? அது ஒரே எழுத்துள்ள சொல் என்றேன் | ||
|
Monday, December 1, 2008
சுமை!
மூட்டை சுமந்து
கஷ்டப்படக்கூடாதென்று
பள்ளிக்கு அனுப்பினார்
தந்தை...
பாவம் குழந்தை
பள்ளிக்கும் (புத்தக)
மூட்டையுடன் தான்
செல்கிறது..!
கஷ்டப்படக்கூடாதென்று
பள்ளிக்கு அனுப்பினார்
தந்தை...
பாவம் குழந்தை
பள்ளிக்கும் (புத்தக)
மூட்டையுடன் தான்
செல்கிறது..!
முயற்சி!!!
முயன்றால் முடியாதது என்று
எதுவும் இல்லை இவ்வுலகில்....
நானும் முயன்றேன்
உன்னை மறக்க....
ஒவ்வொரு முயற்சியும்
நினைவூட்டியது
நீ என்பது நான் என்று!!!!!!!!
எதுவும் இல்லை இவ்வுலகில்....
நானும் முயன்றேன்
உன்னை மறக்க....
ஒவ்வொரு முயற்சியும்
நினைவூட்டியது
நீ என்பது நான் என்று!!!!!!!!
அதிசயம்
வீசும் காற்றில்
விலகியது கூந்தல்...
அடடா என்ன அதிசயம்!
முழு நிலவின் இரு பக்கங்கத்திலும்
மூன்றாம் பிறை- உன் செவ்விதழ் செவிகள்.
விலகியது கூந்தல்...
அடடா என்ன அதிசயம்!
முழு நிலவின் இரு பக்கங்கத்திலும்
மூன்றாம் பிறை- உன் செவ்விதழ் செவிகள்.
Subscribe to:
Posts (Atom)