என்ன பெத்தவள தெய்வம்ன்னு சொல்லமாட்டேன்.. அதுக்கும் ஒரு படி மேல அவ!...
சின்ன வயசுல குலதெய்வம் கோயிலுக்கு கூட்டிப்போவா.. விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறம்தான். எனக்கு தெரியும், என் குலம் காக்க வந்த தெய்வமே அவதான்னு!
யாராவது திண்பண்டம் சாப்பிட, அவளுக்கு கொடுத்தா.. கைக்குள்ள வச்சிருந்து.. கவனமா எடுத்து வந்து என்ன சாப்பிட வச்சு அழகுபாப்பா..
எந்த பேண்ட், சட்டை போட்டு வந்து அவ முன்னாடி நின்னாலும் பார்க்காமலேயே, அவகிட்டருந்து வர வார்த்தை.. 'மகராசன் மாதிரி இருக்கியா நீன்னு'
எனக்காகவே வாழறாளே அவளுக்கு என்ன செஞ்சா தகும். அவள கண்ணுக்குள்ள வச்சுபார்த்தா அது ஒன்னும் பெருமைஇல்ல..
அவள பார்க்காம போனா நான் மனுசனே இல்ல... | | |
|
No comments:
Post a Comment